தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு!

April 10, 2021

தேங்காய் எண்ணெய் தொடர்பாக பரிசோதனைகளை மேற்கொள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளது. 
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு! தேங்காய் எண்ணெய்க்கு நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு! Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

உலகில் அதிக செல்வந்தர்களை கொண்ட நகராக தெரிவு செய்யப்பட்ட இடம்...

April 10, 2021

உலகிலேயே அதிகமாக பெரும் செல்வந்தர்களை கொண்ட நகரமாக சீனாவின் தலைநகர் பீஜிங் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போபர்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது. 
அங்கு 100 பெரும் செல்வந்தர்கள் காணப்படுவதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 99 பேருடன் இரண்டாம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் பீஜிங் பெரும் செல்வந்தர்களை விட நிவ்யோக் 
பெரும் செல்வந்தர்களின் மொத்த சொத்து மதிப்பு 80 பில்லியன் டொலர் அதிகமாகும். 
140 பெரும் செல்வந்தர்களுடன் இந்தியா மூன்றாம் இடத்திலும் 698 பேருடன் சீனா இரண்டாம் இடத்திலும் 724 பேருடன் அமெரிக்கா முதலாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக செல்வந்தர்களை கொண்ட நகராக தெரிவு செய்யப்பட்ட இடம்... உலகில் அதிக செல்வந்தர்களை கொண்ட நகராக தெரிவு செய்யப்பட்ட இடம்... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

April 10, 2021

கடந்த மாதம் (மார்ச்) நடைபெற்ற 2020 க்கான சாதாரணதர பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயல்முறை பரீட்சைக்குரிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
அந்த வகையில் மே 18 முதல் 
30 வரை இந்த செயல்முறை பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

அரச ஊழியர்களுக்கு ரமழான் மாதத்தில் வழங்கும் விசேட விடுமுறை மற்றும் முற்பணம் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு)

April 10, 2021

இந்த வருட ரமழான் மாதத்தில் அரச ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய விஷேட விடுமுறை மற்றும் முற்பணம் தொடர்பாக 06/2021 இலக்கம் கொண்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கையை பொது சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
இதில் நாளாந்தம் தொழுகை மற்றும் விசேட வழிபாடுகளுக்காக வழங்கப்பட வேண்டிய விடுமுறை மற்றும் பெருநாள் தினத்திற்கு 14 நாட்களுக்கு முன்னதாக வழங்க வேண்டிய முற்பணம் போன்ற பல விபரங்கள் கூறப்பட்டுள்ளன. 
சுற்றறிக்கையை தமிழில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.  
ஆங்கிலத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
அரச ஊழியர்களுக்கு ரமழான் மாதத்தில் வழங்கும் விசேட விடுமுறை மற்றும் முற்பணம் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) அரச ஊழியர்களுக்கு ரமழான் மாதத்தில் வழங்கும் விசேட விடுமுறை மற்றும் முற்பணம் (மும்மொழிகளிலும் சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

09-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

April 10, 2021

09-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
Official gazette released on 09-04-2021 (In three languages) 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Tami Gazette. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for English Gazette. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
Click the link below for Sinhala Gazette.
09-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 09-04-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு....

April 10, 2021

இவ்வருடத்திற்குரிய புமைப்பரிசில், சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அந்த வகையில் புதிய திகதிகள் வருமாறு: 
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: அக்டோபர் 3. 
உயர்தர பரீட்சை: ஒக். 04 - ஒக். 30 வரை. 
சாதாரண தர பரீட்சை: 2022 ஜனவரி இறுதி வாரத்தில்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு.... ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்.... புதிய திகதி அறிவிப்பு.... Reviewed by irumbuthirai on April 10, 2021 Rating: 5

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்?

April 08, 2021

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நௌபர் மௌலவி என அமைச்சர் சரத் வீரசேகர சொன்னபோதிலும், உண்மையான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார். 
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (7) நடைபெற்ற விவாதத்தின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். 
இந்த தாக்குதலின் நடிகராக சஹ்ரான் செயற்பட்டிருக்கலாம். சாரா என்ற நடிகை காணாமல் போயுள்ளார். இந்த நிலையில், இந்த தாக்குதலின் 
பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Pakkam Bin-abu என்ற நபர் குறித்தும் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவு தொடர்பிலும் ஆராய வேண்டியுள்ளது. 
மேலும் இத்தாக்குதலை திட்டமிட்டு வழிநடத்தியவர்கள் வௌியில் உள்ளனரா என்பது குறித்தும் ஆராய வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்? ஏப்ரல் 21 தாக்குதலின் பின்புலத்தில் இஸ்ரேல்? Reviewed by irumbuthirai on April 08, 2021 Rating: 5

ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா...

April 07, 2021

2014ல் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து 'இது என்ன மாயம்' என்ற படத்தைத் தயாரித்தது ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம். 
இந்த படத் தயாரிப்பிற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் 
ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது. இந்த பணத்தை திருப்பித் தராத காரணத்தால் இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டதற்கமைய சரத்குமாருக்கு மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து தண்டனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார்.
ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா... ராதிகா மற்றும் சரத்குமாருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை... கொரோனா பாதிப்பில் ராதிகா...  Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

ஜம்இய்யா உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! அனுமதியளித்த சட்டமா அதிபர்!

April 07, 2021

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
இதில் ஜம்இய்யா எனப்படும் இலங்கை இஸ்லாமிய 
மாணவர் இயக்கமும் உள்ளடங்குகிறது. குறித்த 11 அமைப்புகளும் பின்வருமாறு: 
  • 1) சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ) 
  • 2) யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ) 
  • 3) இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ) 
  • 4) அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ) 
  • 5) இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM) 
  • 6) ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM) 
  • 7) தாருல் ஆதார் & ஜமியுல் ஆதர் - Dharul Adhar & Jamiul Adhar 
  • 8) இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS) 
  • 9) அல்கொய்தா - Al-Qaeda 
  • 10) சூப்பர் முஸ்லீம் - Super Muslim 
  • 11) சேவ் த பேர்ள்ஸ் Save the Pearls
இதேவேளை அடிப்படைவாத சிங்கள அமைப்புகளுக்கு தடை விதிக்கப்படவில்லை. பொது பல சேனா அமைப்பையும் தடைசெய்ய வேண்டுமென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜம்இய்யா உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! அனுமதியளித்த சட்டமா அதிபர்! ஜம்இய்யா உட்பட 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! அனுமதியளித்த சட்டமா அதிபர்! Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம்

April 07, 2021

இம்முறை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என வட கொரியா அதிரடியாக அறிவித்துள்ளது. 
தமது நாட்டு வீரர்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 
பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது. 1988ற்கு பின் முதன்முறையாக வடகொரியா இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளை தவறவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் வடகொரியாவின் அதிரடி தீர்மானம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு:

April 07, 2021

ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகிள்ளதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார். 
இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் தேசிய தேர்தல் 
ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை ரஞ்சன் ராமநாயக்கவிற்கு விதிக்கப்பட்டு தற்போது அவர் சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு: பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தார் ரஞ்சன் ராமநாயக்க: சற்றுமுன் வெளியான அறிவிப்பு:  Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்

April 07, 2021

05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை (Cabinet Decisions) இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பெற கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் 05-04-2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5

யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம்

April 07, 2021

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும் இலங்கையர்களின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத 
பிள்ளைகள் மற்றும் விமானம் மூலம் வருகை தரும் இலங்கை மாலுமிகள் ஆகியோர் வெளிநாட்டு அமைச்சு மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை ஆகியவற்றின் முன் அனுமதியின்றி இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என வெளிநாட்டு அமைச்சு நேற்று(6) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
எவ்வாறாயினும் பயணிகளின் வருகையை நிர்வகிக்கும் பொறுப்பு சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உள்ளூர் தனிமைப்படுத்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்கும் வகையில் குறித்த அதிகாரசபை உரிய விமான நிறுவனங்களினூடாக வருகை தருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் யார் யார் நாட்டிற்குள் முன் அனுமதியின்றி வரலாம்? வெளிநாட்டு அமைச்சின் விளக்கம் Reviewed by irumbuthirai on April 07, 2021 Rating: 5
Powered by Blogger.