புதிய சட்டமா அதிபரின் அதிரடி!
irumbuthirai
June 03, 2021
சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் இரத்துச் செய்துள்ளார்.
இதற்கான சுற்றறிக்கையை சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் சட்ட மா அதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள்.
முன்னைய சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார்.
தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய சட்டமா அதிபரின் அதிரடி!
Reviewed by irumbuthirai
on
June 03, 2021
Rating:
