அரசியல் கைதி

கடந்த 30வருடங்களாக நடந்து முடிந்த யுத்தமொன்றின் காரணமாக பலர் தங்களது உறவுகளையும், உடைமைகளையும் இழந்து இன்னும் அதிலிருந்து மீளமுடியாத நிலையிலே இருக்கின்றார்கள்..
இன்னும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்..
அத்தோடு பலர் அரசியல் கைதிகளாக ஆயுள் கைதியாக்கப்பட்டு தங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றார்கள்..
அவ்வாறான நிலையில் உள்ள அரசியல் கைதி தான் சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன்...

கடந்த 2008 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் ஆவர்.. இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். கடந்த 15 ஆம் திகதி சுகயீனம் காரணமாக இவர்து மனைவியான ஆனந்த சுதாகர் யோகராணி  உயிரிழந்தார்தன் மனைவியின் இறுதி அஞ்சலி செலுத்த 3 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு,
மீண்டும் பொலிஸாரால் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்.


தந்தை சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய போது அவரது மகளும் தந்தையுடன் சிறைச்சாலை வாகனத்தில் ஏறும் போது அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது குழந்தை தன் தந்தையை பார்த்துஅப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பாஎன கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டது...
எந்தவித தப்பும்மறியாத அந்த பிஞ்சு உள்ளத்தில் தன் தந்தை ஒரு கைதியேன்று எவ்வாறு புரியும்???
தன் தந்தை வெளிய சொல்வதாக எண்ணியே அவளும் அவருடன் செல்ல எத்தனிக்கும்
அத் தருணம் பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை ஊற்றேடுக்க வைக்கிறது...

10 வருடங்கள் தந்தையின் அரவணைப்பின்றி தாயின் அரவணைப்பிலேயே வாழ்ந்து வந்த அந்த சிறுவர்கள் இன்று தாயையும் இழந்து ஆநாதை ஆக்கப்பட்டுள்ள அவல நிலை... அந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு என்ன வழி?..
அவர்களின் பாதுகாப்பு, அன்றாட தேவைகள் , கல்வி போன்ற அனைத்திற்கு எந்த வித வழியுமின்றி நிர்கதியாக்கப்பட்டுள்ளார்கள்..

தங்களது தந்தை கூட இருந்தால் ஆவது அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், அவரும் அரசியல் கைதியாக்கப்பட்டு ஆயுள் முழுக்க சிறையில்!!!!
இந்த நிகழ்வை அனைத்து அரசியல்வாதிகள் எங்கள் ஜனாதிபதி, பிரதமர் கூட பார்த்து இருப்பர்..
உங்களுக்கும் மனது உள்ளது, அதில் இரக்கம் கூட உள்ளது, மனிதாபிமானம் கூட உள்ளது...
அவ்வாறு இருக்க இன்னும் ஏன் அக் கைதிக்கு உங்களால் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியவில்லை, இவர் குழந்தை மட்டும் இல்லை இவரது தாயான சுமதி தனது சொத்துக்களை விற்று தன் மகனின் விடுதலைக்காக வாதாடி வந்து தற்போது வசிப்பதற்கு கூட வீடு இன்றி உள்ளார்...


தனது பிள்ளைகளின் எதிர்காலம் தன் தாயின் அவலநிலை என்பவற்று ஆனந்த சுதாகரனால் தான் உதவ முடியும். அவர் அவர்களும் இருந்தால் தான் அவர்களது வாழ்க்கையை முன்னேற்ற முடியும்
இக் குடும்பத்தினது எதிர்காலத்தினை கருத்திற் கொண்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இவ் அரசியல் கைதிக்கு மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு தாழ்மையுடன் இந்நாட்டின் மனிதாபிமானமுள்ள ஒரு பிரஜையாக கேட்டுக்கொள்கிறேன்.

இயற்கை கூட தன் சீற்றத்தை குறைத்துக் கொள்ளுமாம் மனிதாபிமானம் கொண்டு......... அவ்வாறு இருக்க இரக்க மனமுள்ள மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் மனிதாபிமானம் இன்றி இப் பூமியில் உலாவுகிறாய்???
கண் விழித்துப் பார் பிறர் படும் அவலநிலைகளை......

அப்போதாவது உனக்கு மனிதாபிமானம் வருகிறதா என்று...!!!!”
அரசியல் கைதி அரசியல் கைதி Reviewed by Tamil One on November 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.