பாராளுமன்ற கட்டளைகளுக்கு அமைய 225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது எந்த பக்கம் நிரூபிக்கப்படுகிறதோ அந்த பக்கம் புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த விதமான தடையுமின்றி பிரதமராக இருக்கலாம்.
அப்படி அவருக்கு பெரும்பான்மை இல்லை என்றால்
அவரே ஒரு முடிவை எடுப்பார் என்று நம்புகிறேன்.
ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. நானே பதவியில் இருந்து நீக்கி விட்டு, அவரை நியமிக்க முடியாது, என்பதில் உறுதியாக இருக்கிறேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் புதிய பிரதமரை நியமிப்பேன்- ஜனாதிபதி அதிரடி
Reviewed by Tamil One
on
November 25, 2018
Rating:
No comments: