சர்கார் திரைப்படத்தில் சொல்லப்படுவது போன்று நிச்சயமாக தங்களது அரசியல் இருப்புக்காகவும், தேர்தல்கால மேடைப்பேச்சுக்களுக்காகவும் சில சமூகப் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் வேண்டுமென்றே செய்யாமல் அப்படியே கிடப்பில் வைத்திருப்பார்கள். அல்லது செய்வதுபோல நடித்து மக்களை ஏமாற்றுவார்கள்.
அந்த வகையில்தான் எமது அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் உடனடியாக நிறைவேற்றப்படவேண்டிய பிரச்சினைகளான...
1. ஒலுவில் மீன்பிடி மற்றும் மன்னரிப்பு பிரச்சினை
2. அக்கரைப்பற்று வட்டமடு மற்றும் நுரைச்சோலை காணிப்பிரச்சினை
3. அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்ட பிரச்சினை
4. பொத்துவில் குடிநீர்ப் பிரச்சினை
5. இறக்காமத்து மாயக்கல்லி சிலைப்பிரச்சினை
6. சாய்ந்தமருது தனிப் பிரதேச சபைப் பிரச்சினை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்...
இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படுமாக இருந்தால் நிச்சயமாக அது மக்களுக்கு பாரிய வெற்றியாக அமையும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அவை ஆகவும் தோல்வியைத் தரக்கூடும். அதனாலேதான் இந்த விடயங்களை எப்படியேனும் கிடப்பில் வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள். காரணம் அவர்களின் அரசியல் / தேர்தல் இருப்புக்கான துரும்புகள் இவைதான்.
ஆகவே இவ்வாறான அரசியல்வாதிகளையும் அரசியல் தலைமைத்துங்களையும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துத் தருவார்கள் என்று நம்பிக்கொண்டிருப்பதும் அதற்காக காத்துக்கொண்டிருப்பதும் ஆகப்பெரிய முட்டாள்தனம் என்றே கருதவேண்டும். அவ்வாறு அரசியல்வாதிகளிடம் இதனை விட்டு வைக்காமல் ஒரு சிவில் சமூகமாக, மக்கள் புரட்சியின் மூலம் இதனைத் தீர்க்கவேண்டிய ஒரு கட்டாய கடமையில் நாம் இருக்கிறோம்.
ஒன்றினைந்த மக்கள் சக்திக்கு நிகர் ஏதுமில்லை. அதனையும் தாண்டி அரசியலானது எந்தவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாது. மக்கள் சக்தியின் முன்னால் அரசியல் எப்போதும் மண்டியிட்டே ஆகும். ஆனால் அதற்கு கட்சிகளை மறந்த, அரசியல்வாதிகளின் அடிமைகளாக வலம் வருவதை தவிர்த்த மக்கள் கூட்டம் முன்வரவேண்டும். அந்த மக்கள் கூட்டத்தின் முயற்சியும் எழுச்சியும் நிச்சயமாக வெற்றியைத் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
என்னைப்பொருத்த வரைக்கும் ஒரு மக்கள் புரட்சியின் மூலமே எமது இருப்பினையும் எதிர்கால வெற்றியினையும் உறுதிப்படுத்த முடியும்.
#நிலமே_எங்கள்_உரிமை
அஷ்ரப்

அம்பாறை மாவட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்!!
Reviewed by Tamil One
on
November 21, 2018
Rating:
No comments: