தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது

சேனா படைப்புழுவை அழிப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


       இப் பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும்  டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
இப் படைப்புழு பரவும் வேகம் தற்போது படிப்படையாக குறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
மீண்டும் அவர் கூறுகையில்  விவசாயத் திணைக்களமிருந்து மறு அறிவித்தல் வரும் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


சோளப்பயிர் மட்டும் இல்லாமல் மற்ற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.