வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும்

"டேய் மச்சான், பொம்புள புள்ளயல் இரிக்கிற குரூப்புகள் ஏதும் இருந்தா என்னயும் எட் பன்னி உடன்டா, அலுப்பா கெடக்கு, டைம்பாசுக்கு ஒருத்தியும் இல்லாம"

"அப்புடி ஒண்டயும் காணல்லடா, முபீஸ்கிட்ட இரிக்கிம் அனுக்கிட்ட கேளு எட் பன்னுவான்."

எப்போதும் பெண்களுடனேயே பேசி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் சமீருக்கு அப்போது யாருமே தொடர்பில் இல்லை என்பது வெறுப்பாகவே இருந்தது. ஊரில் எந்தப் பெண்ணை கண்டாலும் விடுவதில்லை, பாடசாலை கலைப்பது தொடக்கம் இரவு பிரதான வீதிக்கு வரும் பெண்கள் வரை எல்லோரையும் பார்ப்பான். எல்லோருக்கும் பின்னால் செல்வான். மொத்ததில் அவனை ஒரு பிளேய் போய் என்றே சொல்லவேண்டும்.

இரவு தூங்க வந்தவனுக்கு முபீஸின் நியாபகம் வர உடனே வாட்சாப்பில் முபீசுக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பிவிட்டான். பதிலுக்கு முபீசிடமிருந்து "ஒரு குரூப் இரிக்கி பரவால்ல எட் பன்றன், கடும் ஓவரா போகாத, சும்மா பன் ஆஆ சட் பன்னு எல்லாரும் நம்முட ஊராளுகள் மறுகா கனகாட்டு" என்று பதில் வந்தது.

"டேய் மச்சான் நான் ஓவரா போகமாட்டன், எல்லாம் சும்மா பன் தானே. பொம்புள புள்ள எண்டா அதுகள் நமக்காக பொறந்தவளுகள்டா, பொம்புள புள்ளயல ஊட்டுக்க அடச்சி வெக்கப்போடா சுதந்திரமா உடனும், அதுகளுக்கும் ஆசா பாசம் இரிக்கிம்தானே. அத நாமானேடா நெறைவேத்தனும். நீ எட் பன்னி உர்ரா சும்மா வெளாடுவம்" என்று வழமையான பாணியில் பதில் கொடுத்தான் சமீர். உடனே "Girls & Boys" என்ற ஒரு குரூப்பில் சமீருடைய இலக்கம் எட் பன்னுபட்டது.

அதில் பல இலக்கங்களில் ஆண்கள் பெண்கள் என பலர் இணைந்திருந்தார்கள். ஹாய் என்று தொடங்கிய மெசேஜிலிருந்து இரவு தூக்கம் வரும்வரை ஏகப்பட்ட ரெகோடிங்க்ஸ், போட்டோஸ், நகைச்சுவை, டபுள் மீனிங் கதைகள் என்று அந்த இரவே அந்த குரூப்பினால் கலகலப்பாக இருந்தது. இறுதில் "Semma cool aa irukku, naan thoonga poren, virumbina aakel wanga, good night😘" என்ற மெசேஜூடன் நிறைவு பெற்றான். எப்புடியும் இந்த குரூப்புல ஒருத்திய செட் ஆக்கிரனும் என்ற எண்ணத்தோடு அன்று இரவுத்தூக்கம் ஆனது அவனுக்கு.

காலை பதினொரு மணிக்கு தூக்கம் விழித்து டேட்டாவை ஒன் பன்னி வாட்சாப் பேஸ்புக்கில்தான் முதலில் கண் வைத்தான். இரவு அவனை எட் பன்னியிருந்த குரூப்பிலிருந்து ஒரு இலக்கம் லெப்ட் ஆகியிருந்தது. "அடேய், யார்ரா இது, நம்ம வந்த அடுத்தநாளே ஒருத்தி லெப்ட் ஆகியிருக்காள்" என்று எண்ணியவனாக எதேச்சையாக அந்த இலக்கத்தினை தன்னுடைய சிறிய தொலைபேசியில் டயல் செய்து பார்த்தான்.

மாலையில் முபீஸிடமிருந்து அழைப்பொன்று வந்தது. ஆன்சர் பன்னி என்ன மச்சான் என்று கேட்டதற்கு "என்னடா குரூப்ல இருந்து காலைல லெப்ட் ஆகியிருக்காய்?" என்றான் முபீஸ். சிறிது அமைதி காத்தவன் "ஒண்டுமில்ல மச்சான் போன் லோடாகிட்டு, என்ன இனி குரூப்புல எட் பன்னனாம், நான் பொறகு பேசுறன்" என்று சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

காலையில் அந்த குரூப்பிலிருந்து விலகியிருந்தது அவனுடைய சொந்த தங்கையின் வாட்சாப் இலக்கம்தான் என்பதை எப்படி மற்றவனிடம் சொல்வான்! அவமானத்தில் கூனிக்குருகிப்போனான்...!

வலைத்தளங்களில் அவதானமாகவும் நாகரீகமாகவும் இருங்கள். உங்கள் குடும்பத்தினர் உடன்பிறப்புக்கள் அறிந்தோர் அறியாதவர் என உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் நடத்தைகளை பலர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அஷ்ரப்
(பிடித்து இருந்தால் பகிரவும்)
வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும் வாட்ஸ்அப்பும் நிகழ்கால வாழ்க்கையும் Reviewed by Irumbu Thirai News on January 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.