தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம்


தோல் நோய்கள் அதிகமாக ஏற்படுவது வெப்பமண்டல பகுதிகளில் வாழ்ந்து வருவோர்களுக்கு  தான்அவ் வகை நோய்களில்  ஒன்று தான் இந்த தேமல். இது ஒரு வகை பூஞ்சணத் ( Fungus ) தொற்றக் கூடியது
இத் தேமல் ஆனது  கழுத்து, கை, கால், மார்பு, முதுகு, முகம் ஆகிய இடங்களில் வெள்ளை நிறத்தில் பொட்டுகள் ஏற்படும்.

தேமல் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லாருக்கும் ஏற்படும் ஆபாயம் காணப்படும்.. ஆனால்  இளம்பருவத்தினருக்கே அதிகாம தேமல் வருகிறது. இத் தேமல் வெள்ளையாக இருந்தாலும் சில கருந் தேமல்களும் உண்டு .
கட்டுப்படுத்துவதற்கு இலகுவாக இருந்தாலும் மீண்டும் வர வாய்ப்பும் உண்டு

இந்த பிரச்சனை அதிகமாக வியர்பவர்களுக்கும், ஸ்டெராய்டு மாத்திரைகளை பல நாட்களாக எடுத்து வருபவர்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி, வைட்டமின் பி12 குறைவாக இருப்பவர்களுக்கும், சர்க்கரை வியாதி 
உள்ளவர்களுக்கும் அடிக்கடி வரும்.


தேமல் வருத்தம் வந்தால் குணமாவதற்கு பயன்படுத்தும் மருந்துகள் சில கீழ் வருமாறு

1 . Ketoconazole cream 
2 . Ketoconazole shampoo 
3 . Clotrimazole cream 
4 . Selenium sulfide shampoo
5 . Fluconazole tablet 

நம் உடலில் பல இடங்களில் தேமல் வருகின்றது ஆனால் பிரதானமாக முதுகில் தேமல் இருக்கின்றவர்கள் மேற்கூறிய shampoo ஒன்றை  கையில் சிறிதளவு எடுத்து அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு கசக்கி கலந்துவிட்டு தேமல் இருக்கும் இடங்கள் முழுதும் தடவி விட்டு , குறைந்தது 5-10 நிமிடங்கள் காத்திருந்து அதன் பின் குளிக்கவ்ய்ம்



இவ்வாறு 10 - 14 நாள்  தினமும் ஒரு முறை செய்து வந்தால போது பயன் அடைவீர்கள் . Shampooயினை முகத்தில் பாவிப்பதை தவிர்த்துக் கொள்வது மிக நல்லது . விரைவாக குணமடைவதற்காக அதிகமாக எடுத்து பாவிக்கவும் கூடாது . சிறிதளவு எடுத்து நீரில் கலந்து மெல்லிய படை போல் பூசினால் போதும்
சில இடங்களில் மட்டும் அல்லது முகத்தில் இருப்பவர்கள் மேற்கூறிய Cream வகைகளில் ஏதாவது ஒன்றை பாவிக்கலாம் . தொடர்ந்து 4 வாரங்கள் இரு வேளை பாவிக்க வேண்டும்

வாரத்துக்கு ஒரு முறைப்படி இரண்டு வாரம் Fluconazole மாத்திரை 300 mg பாவிப்பதினால் பலன் கிடைக்கும்..
பங்கசுக் கிருமிகளை மேற்கூறிய காலம் வரை இந்த மருந்து வகைகளை பாவிப்பதன் மூலம் தொற்று நீக்கப்பட்டாலும்  தோல் நிறம் பழைய நிலைக்கு மாறுவதற்கு சில வாரங்கள் முதல் மாதங்கள் எடுக்கலாம் . நெடுநாட்களாக தோல் நிறம் பழைய நிலைக்கு திரும்பாதவிடத்து வாரம் ஒருமுறை பாவித்து வருவது மீள் தொற்றிலிருந்து பாதுகாக்கும்



மேற்கூறிய காலங்கள் பாவித்தும் பலன் அளிக்கவில்லை என்றால் மருத்துவர் ஒருவரை நாடுங்கள் ஏனெனில் வேறு சில தோல் நோய்களும் தேமல் போல் தோற்றமளிக்க முடியும்

Dr.CIM.Hassan Soofi - Sri Lanka 🇱🇰

அனைவருக்கும் பகிரவும்

தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் தேமல் நோயினை எவ்வாறு குணப்படுத்தலாம் Reviewed by Irumbu Thirai News on January 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.