முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தற்போத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
என்னவன்றால் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அணியுடன் இணைந்து கொள்ள வேண்டாம் என ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அவர் முன்வைத்துள்ளார்.
மக்களினால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தரப்புக்களுடன் இணைந்து அரசியல் செய்ய வேண்டாம் மற்றும் கட்சியின் தற்போதைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ள தரப்பினருக்கு கட்சியில் நீடிக்குமாறு தாம் ஆலோசனை வழங்கியதாகவும் கட்சியை பலப்படுத்துமாறு கூறியதாகவும், சந்திரிக்கா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியிலேயே நாட்டில் பல்வேறு அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாகவும் இதனை தாம் மறந்துவிடவில்லை எனவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
மக்களின் ஆணையை நிராகரிக்கக் கூடாது எனவும், இந்த வழியில் பயணித்து அனைவரையும் வழிநடத்துமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அடையாளத்தை உறுதி செய்யுமாறு கட்சியின் அமைப்பாளர்கள் விடுத்த கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் சந்திரிக்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மைத்றிக்கு சந்திரிக்கா அனுப்பிய கடிதம்
Reviewed by Irumbu Thirai News
on
January 15, 2019
Rating:
No comments: