Mobile phone பாவிக்கிறீங்களா?
கட்டாயம் இத வாசியுங்கள், மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இலங்கையில் பிரதானமாக பயன்படுத்தப்படும் இரண்டு தொலைபேசி இணைப்புக்களை வழங்கும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அடாத்தாக உங்களின் பணங்களை சூரையாடுவதை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
ஆம், நாம் அறியாத வகையில் சில சிம் வலையமைப்புக்கள் நம்மிடமிருந்து நமது பணத்தைப் பறித்துக்கொள்வதை நம்மில் சிலர் அறிந்திருக்கக் கூடும், பலர் அறியாமலும் இருக்கமுடியும். உதாராணமாக நாம் ஒருவருக்கு அழைப்பை மேற்கொள்ளும்போது அங்கே ஒரு பாடல் ஒலிக்கிறது, நமக்குத் தெரியாமலே நமது மொபைலில் ஒரு குறியீடு அழுத்தப்படுவதன் மூலம் அந்தப் பாடல் நமது இலக்கத்திற்கும் மாறி விடுகின்றது. அதற்காக ஒவ்வொரு நாளும் நமது சிம் கார்ட்டிலிருந்து பணம் சுரண்டப்படுகிறது.
வாடிக்கையாளர் ஒருவரை மாதமொன்றுக்கு இரண்டு தடவைகளே இலவசமாக தொடர்புகொள்ள முடியும் என்று அறிவிக்கிறார்கள், இரண்டு தடவைகள் நாம் மேற்கொள்ளும் அந்த இலவச அழைப்புக்களும் இடையில் வேண்டுமென்றே தடைசெய்யப்பட்டு பின்னர் ஏற்படுத்தப்படும் அழைப்புக்கு எமது இலக்கத்திலிருந்து பணத்தை சுரண்டிக் கொள்கிறார்கள்.
நம்மை அறியாமலே, நமக்கு தெரியாமலேயே பல விளம்பர அப்ளிகேசன்களை இணையத்தின் ஊடாக நமது தொலைபேசிக்கு அனுப்பி நாம் அறியாத வகையில் அவற்றை ஆக்டிவ் செய்து நமது கணக்கிலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
இலவச சேவைகள், வைத்திய ஆலோசனைகள், மற்றும் செய்திச் சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ளுங்கள் என்று எமது இலக்கத்திற்கு மெசேஜ்களை அனுப்பி அதனை நாம் எக்டிவ் செய்த பிறகு ஓரிரு நாட்களில் தொடராக அதற்கு எமது கணக்கிலிருந்து பணத்தை சுரண்டுகிறார்கள், கேட்டால் அது இரண்டு நாட்களுக்குப் பின்னர் இலவசம் இல்லையென்று தப்பி விடுகிறார்கள்.
எங்கேனும் அனர்த்தங்கள் நேர்ந்தால் நிவாரணம் கொடுக்க இந்த இலக்கத்தை டைப் பன்னுங்கள் என்று கூறி எமது பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த நிவாரணம் கொடுக்கப்பட்டதா இல்லையா என்பது பற்றி நமக்கு எதுவும் தெரியாது.
நமக்கு தெரியாமலே நமது இலக்கத்திற்கு நாம் கேட்காத சேவைகளை ஆக்டிவ் செய்து நீண்ட காலத்திற்கு நம்மிடமிருந்து பணத்தைப் பெறுகிறார்கள். பின்னர் கேட்டால் நீங்கள் இன்ன இன்ன வசதிகளை ஆக்டிவ் செய்துள்ளீர்கள் என்று நம்மீதே பழி சுமத்தப்படுகிறது.
உங்களிடம் உள்ள, உங்கள் வீட்டில் உள்ள எந்த தொலைபேசி இணைப்பிலும் எந்த வசதியையும் ஆக்டிவ் செய்யாதீர்கள். அவ்வாறு செய்யுமாறு மெசேஜ் அனுப்பப்பட்டால் முகவரை தொடர்புகொண்டு இவ்வாறான விடயங்கள் எனக்குத் தேவையில்லை என்று கூறி அவற்றை ரத்துச் செய்யுங்கள். நம்மிடமிருந்து அவர்கள் அடுத்த செக்கனில் பணம் பறிக்கிறார்கள், ஆனால் நாம் அதனை மீளக்கேட்டால் பதினைந்து முப்பது நாட்கள் காத்திருக்கச் சொல்கிறார்கள்.
இவ்வாறான சூழ்ச்சியின் மூலம் ஒருவரிடத்திலிருந்து மட்டும் ஒரு ரூபாய் பறிக்கப்படுவதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். இலங்கையில் 27.38 மில்லியன் தொலைபேசி இணைப்புக்கள் இருக்கின்றன. ஒரு இணைப்பிலிருந்து ஒரு ரூபாவை திருடினால் மொத்தமாக 27 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை திருடிக் கொள்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.
உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் இணைப்பிலிருந்து பணம் காணாமல் போனால் முகவரைத் தொடர்புகொண்டு தைரியமாக பேசுங்கள். ஒருவர் ஒன்றுக்கு அதிகமான இணைப்புக்களைப் பாவிப்பதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்!
அஷ்ரப்.

Mobile phone பாவிக்கிறீங்களா? கட்டாயம் இத வாசியுங்கள்
Reviewed by Irumbu Thirai News
on
February 04, 2019
Rating:
No comments: