கடந்த வருடம் (2018) நடைபெற்ற தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான பல்வேறு பகுப்பாய்வு ரீதியான புள்ளிவிபரங்களை இங்கு தருகிறோம்.
இப்பரீட்சை தொடர்பான பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது யாவரும் அறிந்ததே.. பெறுபேறு வெளியாகியவுடன் அவ்விமர்சனங்கள் அதிகரிப்பதும் பின்னர் அவை மறைவதும் வழக்கமாகிவிட்டது.
இப்பரீட்சைக்காக பிள்ளையும் பெற்றோரும் படும்பாடு அளவில்லாதவை. இதில் சித்தியடைந்தால் எல்லாம் கிடைத்துவிட்டதாக எண்ணுபவர்களே அதிகம்.
அந்தவகையில் கடந்த வருடம் இதன் பெறுபேறு புள்ளி அடிப்படையிலும் மாகாண, மாவட்ட, வலய மட்டம் மற்றும் பலவாறு பகுப்பாய்வு செய்யப்பட்டு பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவை இங்கு தருகிறோம்.
பரீட்சைக்குத் தோற்றியோரில் எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது? அப்படியென்றால் மற்றவர்கள் திறமையற்றவர்களா? தற்போது உயர் பதவிகளில் உள்ள பெரும்பாலானவர்கள் இதில் சித்தியடைந்தவர்களா? போன்ற பல்வேறு விடையங்களை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
அன்பார்ந்த பெற்றோரே இது உங்கள் கவனத்திற்கு......
பகுப்பாய்வு தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்க.
2018 புலமைப் பரிசில் பரீட்சையின் உண்மை நிலை இதோ...
Reviewed by irumbuthirai
on
August 04, 2019
Rating:
No comments: