உலகின் முதலாவது 5G ஹோட்டல்


ஒரு கடுமையான தொழில்நுட்ப விரும்பியாகவோ அல்லது அதிக செலவின்றி நவீன ஆடம்பர பயணத்தை நோக்கிச் செல்லும் ஆர்வமுள்ள பயணியாகவோ நீங்கள் இருக்கலாம், அவ்வாறான உங்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள OPPO இன் 5G ஹோட்டலானது பதிலாக அமைகின்றது. 

OPPO அவுஸ்திரேலியா ஆனது, 5G மூலம் சாத்தியமாகின்ற விடயங்கள் பற்றி அனைவருக்கும் ஒரு விளக்கம் அளிக்கும் வகையில், உலகின் முதலாவது 5G இனால் வலுவூட்டப்பட்ட ஸ்மார்ட் ஹோட்டலை உருவாக்கியுள்ளது. முழு ஹோட்டலும் OPPO இன் Reno ஸ்மார்ட்போன், 5G வலையமைப்பு (5G Network) மற்றும் புதிய தொழில்நுட்பத்தால் நிரம்பியுள்ளது. 


இது இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலியா முழுவதும் 5G வலையமைப்பு காணப்படும் இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 

 ஸ்மார்ட் மிரர், 5G கேமிங் சூட், விருந்தினர்கள் தங்கள் குரல் வழியாக மின் விளக்குகளைக் கட்டுப்படுத்தவும், மாய உண்மை (AR), இடையறாத இலவச பொழுதுபோக்கு போன்ற இன்னும் பல அம்சங்கள் இதில் காணப்படுகின்றன.
உலகின் முதலாவது 5G ஹோட்டல் உலகின் முதலாவது 5G ஹோட்டல் Reviewed by irumbuthirai on August 29, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.