1960ஆம் ஆண்டு முதல் 90வரை அமெரிக்காவின் தன்னார்வ ஆங்கில ஆசிரியர்களின் சேவை வழங்கப்பட்டு டெலிக் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை மீண்டும் வழங்க விருப்பம் கொண்டுள்ளது.
இதன்படி கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் சரளமாக பேசுவதற்கான திறன் வளர்ச்சிக்காக அமெரிக்க தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
முதலாம் கட்டமாக 30 ஆசிரியர்களுடன் ஆரம்பித்து 150 வரையான ஆசிரியர்களை கொண்ட குழுவின் ஊடாக வசதிகள் குறைந்த பிரதேச மாணவர்களுக்கு சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கில மொழியை இலகுவாக கையாளக் கூடிய தொழிலாளர் படையணியை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்கில் கஷ்டப் பிரதேச பாடசாலை மாணவர்களின் ஆங்கில மொழியில் பேசும் திறமையை வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் அமெரிக்காவின் அமைதி படையணியின் தன்னார்வ ஆசிரியர்களின் சேவையை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ டெப்லிஸ்ட் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இம்மாதம் 8ஆம் திகதிகல்வி அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் டெலிக் ஆசிரிய சேவை
Reviewed by irumbuthirai
on
August 11, 2019
Rating:
No comments: