வடமாகாணத்தை சேர்ந்த 5,000 இளைஞர் யுவதிகளுக்கு RPL முறையில் NVQ சான்றிதழ் வழங்குவதற்கான செயற்பாடுகள் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் வழிகாட்டலுக்கமைவாக
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இச்சான்றிதழ்களை கணனி, மின்னியல், தையல், தச்சு வேலை, மேசன் வேலை, நீர்க்குழாய் பொருத்துதல், இரும்பு ஒட்டுனர், வர்ணப்பூச்சு வேலை போன்ற தொழில்களை மேற்கொள்பவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
யாழ் மாவட்டத்தை சேர்ந்த 3,000 இளைஞர் யுவதிகள் மற்றும் கிளிநொச்சி 500, மன்னார் 500, முல்லைத்தீவு 500, வவுனியா 500 என ஐந்து மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான பதிவுகள் பிரதேச செயலகங்களில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தொழில்சார் பயிற்சியினைப் பெற்றவர்கள் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் RPLமுறையினுடாக NVQ சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளாதிருப்பின் தங்கள் பிரிவிலுள்ள பிரதேச செயலங்களுக்குச் சென்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதிக்கு முன்பாக பதிவினை மேற்கொள்ளுமாறு வட மாகாண ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவுசெய்யப்பட்டவர்களுக்கு NAITA நிறுவனத்தினால் செய்முறைப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இச்சான்றிதழ்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில்வாய்ப்பிற்கு அடிப்படைத் தகைமையாக கருதப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
(அ.த.தி)
இலவச தொழிற்தகைமை: பதிவுகள் பிரதேச செயலகங்களில்..
Reviewed by irumbuthirai
on
August 21, 2019
Rating:
No comments: