காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி



வெளிப்படையாகப் பேசுவதை தடுக்கும் இடத்தில் இருந்து வெளியேற விரும்புகிறேன்"  காஷ்மீர் மாநிலத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி பேசவேண்டும். ஆனால் என் கருத்துக்களை வெளிப்படுத்த முடியாமல் என் வேலை என்னைத் தடுக்கிறது. 

எளிமையான மக்களின் உரிமைகளுக்காக வேலை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்தான் நான் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தேன். ஆனால், நாட்டில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், என் வேலையை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அது சரியானது அல்ல என என் மனம் சொல்கிறது,'' என்று சொல்கிறார் கண்ணன் கோபிநாத்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தபோது,அரசின் முடிவால் அதிர்ந்து போய், தனது பதவியைத் தூக்கியெறியத் துணிந்துவிட்டார் கண்ணன் கோபிநாதன். 
ஆகஸ்ட் 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அங்கு மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை உயரதிகாரிகளுக்கு அனுப்பினார். ஆனால், அந்த ராஜிநாமா ஏற்கப்பட்டது தொடர்பாக உயரதிகாரிகளிடமிருந்து எந்தவிதத் தகவலும் வரவில்லை என்கிறார். 

33 வயதான கண்ணன் கோபிநாதன், தனது சொந்த மாநிலம் கேரள மாநிலம் கடந்த ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய நேரத்தில், தாதரா நகர் ஹவேலியில் இருந்து நிவாரணப் பணிக்கான காசோலையை அளிக்க வந்தார். மக்களின் துயரங்களை கண்டு, திரும்ப மனமில்லாமல், எட்டு நாட்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டார். யாரிடமும் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளாமல், களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். நிவாரணப் பொருட்கள் அடங்கிய மூட்டைகளைத் தூக்குவது உள்ளிட்ட வேலையை அவர் செய்ததால், சமூக வலைதளங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.
காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி காஷ்மீர் மக்களுக்காக தனது பதவியை தூக்கியெறிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி Reviewed by irumbuthirai on August 27, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.