பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்:



இலங்கையின் சிரேஷ்ட இடைநிலைக் கல்வியின் இறுதிச் சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக க.பொ.த (உ.தர)ப் பரீட்சை உள்ளது. இது முக்கியமாக சான்றிதழ்ப்படுத்தும் பரீட்சையாக நடைபெற்ற போதும் பல்கலைக்கழகங்கள், வேறு உயர்கல்வி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரிகள் என்பவற்றிற்குத் தகைமைத் தெரிவு செய்வதற்கும் இப்பரீட்சையின் பெறுபேறு அடிப்படையாகக் கொள்ளப்படுவதால் இது ஒரு தேர்வுப் பரீட்சையாகவும் கருதப்படுகிறது. இது போன்றே நடுத்தர மட்டத்தில் தொழிலைப் பெறுவதற்கும் இப்பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படைத் தகைமையாகக் கருதப்படுகின்றன. 

2014 ஆம் ஆண்டு வரை க.பொ.த (உ.தர)ப் பரீட்சை தரம் 12, 13 என்பவற்றின் பாடத்திட்டத்தினை அடிப்டையாகக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை என நான்கு பாடத்துறைகள் இடம் பெற்றதுடன் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தொழினுட்பவியல் பாடத் துறையின் கீழும் பரீட்சை நடைபெற்றது. இதற்கமைய உயிரியல், பௌதிகவியல், வர்த்தகம், கலை, பொறியியல் தொழினுட்பவியல், உயிர்முறைமைகள் தொழினுட்பவியல் எனும் பாடத்துறைகளிலும் பரீட்சைகள் நடைபெறும். அந்த வகையில் 2019 முதல் நடைபெறும் புதிய பாடத்திட்டத்தின்படியான பரீட்சைக்கான மாதிரி வினாத்தாள்களையும் அது தொடர்பான விரிவான விளக்கங்களையும் பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

இந்து சமயம் 
இந்து நாகரிகம் 
இஸ்லாம் 
இஸ்லாமிய நாகரிகம் 
கிறிஸ்தவம் 
கிறிஸ்தவ நாகரிகம் 
கிரேக்க உரோம நாகரிகம் 
போன்ற பாடங்கள் தொடர்பான வினாத்தாள்களையும் ஏனைய விபரங்களையும் பெற்றுக்கொள்ள கீழுள்ள லிங்கை அழுத்தவும்.

A.L New syllabus model papers
பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: பரீட்சைத் திணைக்கள வெளியீடு: க.பொ.த (உ.தர) புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள்: Reviewed by irumbuthirai on August 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.