அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ள ஜி7 மாநாடு பிரான்சில் நடைபெற்றது. இதில் முன்னறிவிப்பு ஏதுமின்றி ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென ஈரான் வெளியுறவு அமைச்சர் கலந்து கொண்டார்.
ஈரான் - அமெரிக்க இடையே அதிக பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மாநாட்டில் ஈரான் அமைச்சர் கலந்து கொண்டிருப்பது, அமெரிக்க அதிகாரிகளை வியக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் அதிபரோடு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தியதாக இரான் வெளியுறவு அமைச்சர் ட்விட் செய்துள்ளார்.
2015 இரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்தாண்டு அமெரிக்கா விலகியதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
திடீரென மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அமைச்சர்: வியப்பில் அமெரிக்கா:
Reviewed by irumbuthirai
on
August 26, 2019
Rating:
No comments: