பிரச்சினைகளும் போராட்டங்களும் முடிவில்லாத உலகமாக இது மாறிவிட்டது. ஆனால் அந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் சந்தர்ப்பங்களைத் தேடுபவர்கள் இல்லாமல் இல்லை. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் போட்டி.
காஷ்மீரிலே அண்மைக்காலமாக இடம்பெறும் பிரச்சினைகளை மையப்படுத்தி வருமானமீட்டுவதற்கான போட்டியே இது. ஆம் இந்த காஷ்மீர் பிரச்சினையை சினிமாவாக்க கடும் போட்டி நிலவுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370 ஐ இந்திய அரசு இரத்துச் செய்து விட்டது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் எழுப்பப்படுகின்றன.
நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சினிமா எடுக்க இந்தி தயாரிப்பாளர்கள் கடும் போட்டி போடுகின்றனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து படமாக எடுக்கும் வகையில் தாரா 370, ஆர்டிகிள் 370, காஷ்மீர் ஹமாரா ஹை, ஆர்டிகிள் 35ஏ உள்ளிட்ட 50 தலைப்புகளை இந்தி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இதுவரை பதிவு செய்துள்ளனர். இந்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது.
விக்கிகவுஷல் நடித்த தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படம் சூப்பர் ஹிட்டானது. இது யுரி தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு பாலிவுட் தயாரிப்பாளர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, புல்வாமா: தி டெட்லி அட்டாக், உள்ளிட்ட தலைப்புகளை பதிவு செய்தனர். பாலிவுட் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் காஷ்மீர் குறித்த தலைப்புகளை பதிவு செய்ய கடும் போட்டி நிலவியிருக்கிறது. ஒரு பக்கம் பரபரப்பு. இன்னொரு பக்கம் வருமானத்திற்கான போட்டி.
(மூலம்: கிசுகிசு)
(மூலம்: கிசுகிசு)
காஷ்மீரிலோ பரபரப்பு ஆனால் இதற்கோ கடும் போட்டி.
Reviewed by irumbuthirai
on
August 10, 2019
Rating:
No comments: