மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை அதிகரித்தது.
நாடு முழுவதும் ஜாகிர் நாயக் மீது 200 க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய காவல்துறை அவரிடம் பல மணிநேரம் விசாரணையும் நடத்தியிருக்கிறது.
இதையடுத்து இன, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட மாட்டாது என்றும், உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசிய காவல்துறை தலைவர் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.
இதனால் ஜாகிர் நாயக் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், பிரதமர் மகாதீரின் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகியது.
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
மேலும் ஜாகிர் நாயக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டாம் என்பது மலேசிய அமைச்சரவை ஒருமித்த முடிவு என அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(நன்றி: பிபிசி)
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படுவாரா? வெளியானது பிரதமரின் அறிவிப்பு
Reviewed by irumbuthirai
on
August 25, 2019
Rating:
No comments: