ரொக்கட் ஒன்றினை உருவாக்கிய கம்பஹா பண்டாரநாயக வித்தியாலய மாணவன் கிஹான் காவிந்த ஹெட்டியாரச்சி நேற்று(06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்.
கம்பஹா பண்டாரநாயக வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவுடன் இணைந்ததாக இடம்பெற்ற கண்காட்சியில் இந்த ரொக்கட்டை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இம்மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக முதல் கட்டமாக 10 லட்சம் ரூபாவினை கடந்த ஒக்டோபர் மாதம் வழங்கினார்.
தற்போது ரொக்கட்டின் முன்னேற்ற நிலைமை பற்றியும் எதிர்கால திட்டம் பற்றியும் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கப்பட்டதுடன், தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தார். ரொக்கட்டை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உதவியை வழங்குமாறு ஜனாதிபதி விமானப்படை தொழிநுட்ப அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வில் விமானப் படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ், எயார் வைஸ் மார்ஷல் எம்.டீ. ரத்நாயக ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ரொக்கட் மாணவன் ஜனாதிபதியுடன் சந்திப்பு
Reviewed by irumbuthirai
on
August 07, 2019
Rating:
No comments: