சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர்களுக்கான போட்டி மத்தியஸ்தர் மற்றும் நடுவர்களை ஐ.சி.சி அறிவித்துள்ளது. இதன்படி,
அவுஸ்ரேலியாவின் டேவிட் பூன் இந்தத் தொடரின் போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மைக்கல் அன்ட்ரூ கோப் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜொயல் வில்சன் ஆகியோர் போட்டி நடுவர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ளது.
ஐ.சி.சியின் அனுமதியுடன் சுமார் 10 வருடங்களுக்குப் பின்பு போட்டி மத்தியஸ்தர் மற்றும் போட்டி நடுவர்கள் பாகிஸ்தான் வரவுள்ளமை சிறப்பம்சமாகும். இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
10 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் நடுவர்கள்
Reviewed by irumbuthirai
on
September 24, 2019
Rating:
No comments: