பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமை தவறாகும் என்று உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த நடவடிக்கையினால் ஜனநாயகத்தின் அடிப்படைகளுக்கு ஏற்படும் தாக்கம் பயங்கரமானவை என பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். காரணம் இன்றி, பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாகவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பிரிட்டன் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க பிரதமர் மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானதாகும் என்று பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அக்டோபர் 31ம் தேதி
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறும் காலக்கெடு இருக்கையில், பாராளுமன்றத்தை அதனுடைய கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது தவறு' என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'பாராளுமன்ற நடவடிக்கை ஒத்திவைப்படுவதால் நமது ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஏற்படும் பாதிப்பு மிகவும் தீவிரமாக இருக்கும்' என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி லேடி ஹலே தனது தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார். 'சரியான காரணமின்றி பிரிட்டன் பாராளுமன்றம் ஆற்ற வேண்டிய அரசமைப்பு கடமைகளை நிறைவேற்றுவதை தடுக்கிற அல்லது திறனைத் தடுக்கிற பாதிப்பு இதனால் ஏற்படும் என்பதால் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருப்பது சட்ட விரேதமானது' என்று அவர் இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.11 நீதிபதிகளின்
ஒருமித்த கருத்தாக போரிஸ் ஜான்சனின் இந்த முடிவு செல்லாது என்று அறிவித்த லேடி ஹலே, அடுத்து செய்ய வேண்டியதை முடிவு செய்யும் பொறுப்பு பிரிட்டன் பாராளுமன்ற அவைகளின் சபாநாயகர்களிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பாராளுமன்ற கீழவையின் சபாநாயகர், பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென்றும், இது பற்றி அவசரமாக கட்சி தலைவர்களிடம் கலந்துரையாடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
பிரித்தானிய பிரதமருக்கு எதிராக வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு: 11 நீதிபதிகள் அதிரடி:
Reviewed by irumbuthirai
on
September 24, 2019
Rating:
No comments: