கல்விப் போதனைகளுடன் மட்டும் ஆசிரியர்களின் பணி முடிந்துவிடாது என்றும் பாடசாலையின் மாணவர்கள் குறித்த பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(18) முற்பகல் குருணாகல் வெலகெதர விளையாட்டரங்கில் இடம்பெற்ற வடமேல் மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமன
நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
மேலும் பிள்ளைகள் நவீன தொழிநுட்பத்துடன் முன்நோக்கி செல்கின்றபோது வகுப்பறையின் சவால்களுக்கும் வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய வகையில் ஆசிரியரின் அறிவு இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.
வடமேல் மாகாண ஆளுநர் பேசல ஜயரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, சாந்த பண்டார, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர்களான தர்மசிறி தசநாயக்க, அதுல விஜேசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் 1400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டது. 100 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்து ஜனாதிபதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
(அ.த.தி)
பட்டதாரிகள் 1400 பேருக்கு ஆசிரியர் நியமனம்
Reviewed by irumbuthirai
on
September 19, 2019
Rating:
No comments: