பலாலி விமான நிலையத்தின் விமான சேவை உத்தியோகபூர்வமாக 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கூறினார்.
பலாலி விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை அமைச்சர் இன்று பார்வைஇட்டார்.
இந்த விஜயத்தின் போது ஊடகவியலாளர் மத்தியில் அமைச்சர் உரையாற்றுகையில்
பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கையில்; 4 விமான நிலையங்கள்
சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் என்றும் கூறினார். கட்டுநாயக்கா, மத்தள, இரத்மலானை மற்றும் மட்டக்களப்பு ஆகிய விமான நிலையங்கள் அவையாகும். இந்த விமான நிலையங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தப்பட்ட வலயமாக சர்வதேச விமான சேவைகள் அரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அ.த.தி)
அடுத்த மாதம் 16 முதல் பலாலி விமான சேவை: தொழில் வாய்ப்பில் வடக்கிற்கு முன்னுரிமை:
Reviewed by irumbuthirai
on
September 05, 2019
Rating:
No comments: