நாளை (18)ம் திகதி புதன்கிழமை அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள வெளிவாரி பட்டதாரி பயிலுனர் நியமனத்துக்கான
அழைப்புக்கடிதம் கிடைக்காத மட்டக்களப்பு பட்டதாரிகள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க வினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்றுக்குகிடைத்த அங்கீகாரத்திற்கு அமைய தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சு 2012-2013 கல்வியாண்டில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை
பூர்த்தி செய்தவர்களுக்கு நாளை புதன்கிழமை பட்டதாரி பயிலுனர் நியமனம் வழங்கப் படவுள்ளது . அன்றயதினம் காலை 8மணிக்கு அலரிமாளிகையில் வழங்கப்படவுள்ள பட்டதாரி பயிலுனர் நியமனத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து
326 வெளிவாரி பட்டதாரிகளை குறித்த அமைச்சு தெரிவுசெய்திருப்பதாகவும் இவ்வாறுதெரிவு செய்யப்படடவர்களின் பட்டியல்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் மற்றும் சகல பிரதேசசெயலாளர் அலுவலகங்களின் விளம் பரப்பலகையிலும் நேற்று (16) மாலை போடப்பட்டிருப்பதாகவும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந்த் தெரிவித்தார்.
இந்த நியமனத்துக்கான அழைப்புக்கடிதம் கிடைக்காதவர்கள் தத்தமது பிரதேச செயலகங்களுக்குச் சென்று தமது உறுதிப்படுத்தல் கடிதங்களை பெற்று புதன்கிழமை 18ம் திகதி பிரதமரின் அலறி மாளிகைக்குச்சென்று இந்த நியமனக்கடிதங்களை பெற்றுக்கொள்ளுமாறு மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
வெளிவாரி பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவித்தல்
Reviewed by irumbuthirai
on
September 18, 2019
Rating:
No comments: