மீண்டும் யோர்தான் நாட்டில் 2 மாத காலத்திற்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமான இந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்று யோர்தான் தூதரக அலுவலகம் அறிவித்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
தொழில் விசாவுடன் யோர்தானுக்கு சென்று குறிப்பிட்ட காலத்திற்கு அப்பால் விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த பொது மன்னிப்புக் காலத்தில்
எந்தவித தண்டப்பணமும் செலுத்தாமல் நாட்டிற்கு திரும் பமுடியும்.
இருப்பினும் சுற்றுலா விசாவில் அங்கு சென்று விசா அனுமதிக்காலம் முடிவடைந்த பின்னர் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தண்டப்பணத்தை செலுத்திய பின்னர் அங்கிருந்து வெளியேற முடியும் என்று யோர்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. யோர்தானில் கடந்த பெப்ரவரி மாத்திலும் சட்ட விரோதமாக அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவதற்கு இவ்வாறான பொது மன்னிப்புக்காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
ஜோர்தான்: வீசா இன்றி தங்கியிருப்பவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம்:
Reviewed by irumbuthirai
on
September 28, 2019
Rating:
No comments: