இலங்கை மாற்று அறுவைச்சிகிச்சை துறையில் துரிதமான முன்னேற்றங்களை கண்டிருப்பதாகவும் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும்
சகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சென்னை நகரில் அமைந்துள்ள வைத்தியர் ரீலா நிறுவனம் மற்றும் வைத்திய மத்திய நிலையத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் முஹம்மட் ரீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முஹம்மத் ரீலா கண் மாற்று சத்திரசிகிச்சை துறையில் பிரபல்யம் மிக்கவர். இவர் 4,000 இற்கும் மேற்பட்ட
மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். 10 வருட காலப்பகுதியில் இவர் இலங்கை நோயாளர்கள் 200 பேருக்கு மாற்று சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
விரைவில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சை
Reviewed by irumbuthirai
on
September 27, 2019
Rating:
No comments: