ஜப்பான் அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வாய்ப்பை வழங்கும் வேலைத்திட்டம் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முக்கிய இரண்டு பிரிவுகள் மூலம் தொழில் வாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கு கிடைப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
01. தோழில்நுட்ப சேவை பயிற்சியுடனான தெழில்வாய்ப்பிற்கான உடன்படிக்கை NEW TITP
02. விஷேட செயலாற்றலை கொண்டவர்களுக்காக தெழில்வாய்ப்பிற்கான உடன்டபடிக்கை
SSWRP
NEW TITP
தோழில்நுட்ப சேவை பயிற்சியுடன் தொழிலில் ஈடுபடுவதற்கான உடன்படிக்கையின் கீழ் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் அல்லது பணியகத்தின் அனுமதியுடன் தனியார் தொழில்வாய்ப்பு முகவர் நிலையத்தின் மூலம் இதில் ஈடுபடமுடியம்.
பணியகத்தின் மூலம் IM ஜப்பான் நிறுவனத்தில் இணைத்துக்கொள்ளல் இலவசமாக மேற்கொள்ளப்படும்.
அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தமது தனிப்பட்ட செலவிற்காக சில தொகையை செலவிட வேண்டியிருக்கும். இந்த தொழிலுக்காக விண்ணப்பிக்கும் பணியாளர்களுக்கு ஜப்பான் மொழி ஆற்றல் தொடர்பில் தகுதியிருக்க வேண்டும்.(N5/N4)
பணியகத்தின் அனுமதி பெற்ற தனியார் தொழில்வாய்ப்பு முகவர் நிறுவனம் மேற்கொள்ளும் ஆட்களை இணைத்துக்கொள்வதில் தகுதிகளை கொண்ட தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களிடம் கட்டணம் அறிவிடமுடியும்.
இவ்வாறு அறவிடப்படும் கட்டணம் 350,000.00 இற்கும் குறைந்ததாக இருக்க வேண்டும். இவ்வாறு அங்கீகரிக்கப்படும் கட்டணம் பணியகத்தின் இணையத்தளத்தின் மூலம் அவதானிக்க முடியும்.
ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக இது வரையில் அனுமதிப்பத்திரம் பெற்ற தொழில் முகவர் நிலையங்களுக்காக ஜப்பானில் OTIT என்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெற்ற தொழில்முகவர் பட்டியல் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் மூலம் பார்வை இடமுடியம்.
SSWRP
விஷேட ஆற்றல்களைக் கொண்டவர்களுக்காக உடன்படிக்கைக்கு அமைவாக ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஷேட ஆற்றல்களைக் கொண்ட பணியாளர்களுக்க ஜப்பானிற்கு தொழில்வாய்ப்பிற்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.
இந்த உடன்படிக்கைக்கு அமைவாக 14 துறைகளின் கீழ் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும். பராமரிப்பு சேவை, கட்டிடங்களை துப்பரவு செய்வோர் (SSWRP), இயந்திர உதிரிப் பாகங்கள் மற்றும் ஒன்றிணைத்தல் மற்றும் தொழில்நுட்ப இயந்திர தொழில்துறை, இலத்திரனியல் மற்றும் தகவல் தொழிற்துறை, கட்டிட நிர்மாணத்தை கேந்திரமாக கொண்ட கப்பல் துறை ,கப்பல் தொழில்துறை, போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பராமரிப்பு, விமான தொழிற்துறை, தங்குமிடவசதி, விவசாய தொழில்துறை, கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உற்பத்தி, உணவு பானங்கள் தயாரிப்பு, உணவு சேவை உள்ளிட்ட 16 துறைகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த SSWRP வேலைத்திட்டத்திற்காக எந்தவொரு தேசிய தொழில் முகவர் நிலையத்திற்கும் ஆட்களை இணைத்துக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வேலைத்திட்டத்தின் மூலம் ஜப்பான் தொழில்வாய்ப்பிற்காக செல்வதற்கு தகுதியைக் கொண்டவர்கள் பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பணியகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு இலங்கையில் நடத்தப்படும் விஷேட ஆற்றல்களை பரிசோதிப்பதற்கு செயலகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
இது தொடர்பான தவறான கருத்துக்களை வெளியிட்டு நபர்களை தவறாக வழிநடத்தும் மோசடி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக இவர்களுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முடியும் என்றும் அரசாங்கத்துடன் தொடர்புபட்டிருப்பதாக தெரிவித்து பணத்தை வசூலிப்பதாக சம்பவங்கள் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளன.
இதனால் ஜப்பான் தொழில் வாய்ப்பிற்காக பணம் வசூலிக்கும் நபர்களிடம் சிக்க வேண்டாம் என்றும் அவ்வான நபர்கள் தொடர்பான தகவல்கள் இருக்குமாயின் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு பணியகம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜப்பான் தொழில் வாய்ப்பு தொடர்பாக சகல தகவல்களும் www.slbfe.lk என்ற இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
(அ.த.தி)
ஜப்பானில் வேலைவாய்ப்பு: போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம்: உண்மை விளக்கம் இதோ..
Reviewed by irumbuthirai
on
September 06, 2019
Rating:

No comments: