ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஜித் பிரேமதாச தான் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான முக்கிய தகவல்கள் இதோ..
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும், ஏமா பிரேமதாஸவிற்கும் புதல்வராக 1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி சஜித் பிரேமதாஸ பிறந்தார்.
ஆரம்ப கல்வியை கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளில் தொடர்ந்த சஜித் பிரேமதாஸ, தனது மேல்நிலை கல்வியை லண்டனில் படித்தார்.
சஜித பிரேமதாஸ, ஜலனி பிரேமதாஸவை திருமணம் செய்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் 2001ஆம் ஆண்டு களமிறங்கிய சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ, 2014ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
சஜித் பிரேமதாஸ, எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்குவதற்கு அந்த கட்சியின் செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்கிய பின்னர், இந்த கட்சி சார்பில் முதல் முறையாக ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவே களமிறங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சஜித்? முக்கிய தகவல்கள் இதோ..
Reviewed by irumbuthirai
on
September 27, 2019
Rating:
No comments: