மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றுவரும் இந்நாட்டின் மாணவர்களுக்காக அந்நியச் செலாவணியாக வருடம் ஒன்றுக்கு 800 கோடி ரூபா நிதி வெளிநாடுகளுக்கு செல்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்த ஜனாதிபதி, முதலாவது நியமனம் பெற்று
 
குறைந்தது 10 வருடங்களாவது தனது தாய் நாட்டிற்காக சேவை செய்யுமாறு நாட்டின் முதற் பிரஜை என்ற வகையில் தான் அனைவரிடமும் திறந்த கோரிக்கையொன்றை முன்வைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ள மருத்துவ மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் நேற்று (20) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 
முதலாவது நியமனம் கிடைக்கும் முன்னரே சில மருத்துவர்களும் பொறியியலாளர்களும் 
நாட்டை விட்டுச் செல்வது அனர்த்தமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அது நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு சவால் என்றும் நாட்டை நேசிப்பதைப் போன்று தான் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் உயர்கல்வியின் போது அம் மாணவர்களுக்கு அறிவூட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
(அ.த.தி)
மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி மருத்துவ மற்றும் பொறியியல் துறை மாணவர்களிடம் விசேட கோரிக்கை முன்வைத்த ஜனாதிபதி Reviewed by irumbuthirai on September 21, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.