கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்...

இது பிரான்சில் நடந்த விசித்திர சம்பவம்.  இந்த சேவல் அதிகாலை 4.30 மணிக்கு கூவத் தொடங்குகிறது. மேலும் அது காலை முழுவதும், மதிய வேளைகளிலும் கூவிக் கொண்டிருக்கிறது," என
 
பிரொன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ஃபெசெளவுக்கு 2017ஆம் ஆண்டு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சேவலின் உரிமையாளர்கள் தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாக, பிரொன் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்.
 
இந்த வழக்கு விரைவில் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டது. பிரான்ஸில் நகரமயமாதல் அதிகரித்து வருவதால், கிராமங்களில் அதிகரித்திருக்கும் நகர்புறவாசிகளால் வாழ்வியல் தொடர்பாக பல பிரச்சனைகள் எழுகின்றன என்று கூறப்பட்டது. 
கிராமங்கள் இவ்வாறுதான் இருக்கும். அவர்கள் ஏதும் சொல்லக்கூடாது," என சேவலின் உரிமையாளர் ஃபெசெள தெரிவித்துள்ளார் இந்த வழக்கின் மூலம் மோரிஸ் நாட்டில் பெரும் ஆதரவை பெற்றது. 
அதனை காப்பாற்ற வேண்டும் என இணையத்தில் 1,40,000 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று உருவானது. மேலும் பலர் அதன் முகம் பதித்த டீ- ஷர்ட்டுகளையும் அணியத் தொடங்கினர். 
சேவலின் உரிமையாளர் ஃபெசெள, தனக்கு அதிகடிப்படியான இழப்பீடு 
தரவேண்டும் என பிரொனின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் நீதிமன்றம் மோரிஸுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததோடு, சேவலின் உரிமையாளருக்கு ஏற்படுத்திய துயருத்துக்கு பிரொன் 1,100 அமெரிக்க டாலர்கள் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. 
"பிரான்ஸ் நாட்டு மக்களின் சார்பாக மோரிஸ் வெற்றிப்பெற்றுள்ளது," என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
(நன்றி: பீபீசி)
கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்... கூவுவதற்காக சட்டப் போராட்டம் நடத்திய சேவல்... Reviewed by irumbuthirai on September 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.