மனித உடல் செல்கள் குறித்த ஆய்வு மேற்கொண்ட மூவருக்கு 2019 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும்,
மனித உடலில் உள்ள செல்கள் எவ்வாறு ஒட்சிசனை உணர்ந்து, எடுத்துக்கொள்கின்றன என்பது குறித்து ஆய்வுகளைச் மேற்கொணடுள்ளனர். இவர்களின் ஆய்வுகள் எதிர்காலத்தில் புற்றுநோய், பக்கவாதம், தீவிரமான நோய்வாய்ப்படுதல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகப்பெரிய தீர்வாக அமையும். நேற்று இந்த விருது தொடர்பான அறிவிப்பு
சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டொக்ஹோமில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் கெலின் மற்றும் கிரேக் செமென்சா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த பீட்டர் ரெட்கிளிப் ஆகியோர் 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கு வழங்கப்படும் நோபல் விருதினை பகிர்ந்து கொள்கின்றனர். நோபல் பரிசுத்தொகையானது 9.18 இலட்சம் டொலர் ஆகும். இந்த பரிசுத்தொகையானது மூவரிடையே பகிர்ந்து கொள்ளப்படும்.
(அ.த.தி)
2019 மருத்துவத்திற்கான நோபல் பரிசு இவர்களுக்குதான்..
Reviewed by irumbuthirai
on
October 08, 2019
Rating:
No comments: