தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை



தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இம்முறை  தோற்றிய விசேட தேவைகளைக் கொண்ட 250 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் 

தரம் 13 வரை இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் வரை 15,000 மாணவர்கள் மாத்திரம் இந்தப் புலமைப்பரிசிலைப் பெற்றனர். இந்த வருடம் முதல் இந்த எண்ணிக்கையை 20,000 வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இவர்களில் 19,750 மாணவர்களுக்கு 

அவர்கள் பரீட்சையில் பெற்றுக் கொண்ட புள்ளியின் அடிப்படையில் புலமைப்பரிசில் வழங்கப்படும். எனினும், விசேட தேவையுள்ள மாணவர்களுக்கு இந்தப் பரீட்சையில் தோற்றியதை அடிப்படையாகக் கொண்டு புலமைப்பரிசிலை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. புலமைப்பரிசில் கொடுப்பனவை 500 ரூபா முதல் 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை Reviewed by irumbuthirai on October 25, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.