திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?



சினிமா அரங்கு மற்றும் டிஜிற்றல் (LED) திரைகளில் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தக அறிவிப்புக்கள் பிரச்சாரம் செய்யப்படுவதை தடுப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை 

சவாலுக்குட்படுத்தி உயர் நீதி மன்றத்தில் இன்று (23) ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ரிட் மனுவை தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினால் சட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மனுதாரான நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் 

தேர்தல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை இடைநிறுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி மனுதாரரான நிறுவனம் கோட்டுக்கொண்டுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளான தேர்தல் ஆணைக்கழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரமைகளை மீறுவதாக மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
(அ.த.தி)
திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? திரையரங்குகளில் தேர்தல் பிரசாரம் செய்யலாமா? Reviewed by irumbuthirai on October 23, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.