வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை



சாதாரன தர பரீட்சை வரலாற்றில் இம்முறை இடம்பெறும் பரீட்சையானது பல விதத்தில் முக்கியம் பெறுகிறது. அதாவது கல்வி பொது சாதாரண தர பரீட்சைக்குத் ஆகக்கூடுதலான பரீட்சார்த்திகள் இம்முறை தோற்ற இருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சைக்கு 

7 இலட்சத்து 17 ஆயிரம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இம்முறை பரீட்சை டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குக் காரணம் 

இரண்டாம் மொழியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிக்கு ஆகக்கூடுதலான தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த மேலும் தெரிவித்துள்ளார். நேபாளம் - காத்மண்டு நகரில் இலங்கை தூதரக அலுவலகத்தில் இம்முறை பரீட்சை மத்திய நிலையமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் 7 பேர், சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை மற்றுமொரு விஷேட அம்சமாகும். 
(அ.த.தி)
வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை வரலாற்று சாதனையாகும் 2019 க.பொ.த. (சா/த) பரீட்சை Reviewed by irumbuthirai on November 10, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.