இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும்; மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்;தலில் 50 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர்
75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது, ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.
(அ.த.தி)
ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது
Reviewed by irumbuthirai
on
November 19, 2019
Rating:
No comments: