ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன. வைரஸ் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் நேற்றைய தினம் கண்டி பொது மருத்துவமனையில் உயிரிழந்ததை தொடர்ந்து பல்கலைக்கழகம் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட மேலும் சில மாணவர்கள்
மிகிந்தலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் கவலைக்கிடமான நிலையில் காணப்படும் மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூடப்பட்ட ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்கள்:காரணம் இதோ...
Reviewed by irumbuthirai
on
November 02, 2019
Rating:

No comments: