ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு



ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோயின் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் நான்கு பீடங்களும் எதிர்வரும் 

25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும், பரீட்சைகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 

23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூடப்பட்டிருந்த 4 பீடங்களும் திறக்கும் திகதி அறிவிப்பு Reviewed by irumbuthirai on November 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.