எந்த சூழ்நிலையிலும் இலங்கையுடனான நிண்டகால இருதரப்பு தொடர்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பாகும் என்று ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ரஸ்ய தூதுவர் யுரிபி மாட்டேரி பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தொடர்புகளை மேலும் வலுவூட்டுதற்காக இலங்கையில் உயர் தரத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கு
ரஸ்யாவில் 50 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ரஸ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புலமைப்பரிசில் 2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போது உரையாற்றிய சபாநாயகர் இலங்கை அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துடன் ரஸ்யா முன்னெடுத்துவரும் நட்புறவிற்காக தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் இலங்கையில் உள்ள பிரதி ரஸ்ய தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இலங்கை மாணவர்களுக்கு ரஸ்யாவில் உயர் கல்வி புலமைப்பரிசில்
Reviewed by irumbuthirai
on
November 16, 2019
Rating:
No comments: