சுற்றாடலுக்கு பொருத்தமான முச்சக்கர வண்டியாக சூரிய எரி சக்தியின் மூலம் செயற்படும் முச்சக்கர வண்டி முதன் முறையாக நாட்டில் நேற்று (13) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மீலக்க அரங்கில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. கொரிய நாட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இது தொடர்பாக திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சூரிய பெனர் ஒன்றின் மூலம்
இலத்திரனியல் சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய பெற்றி இதில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இதன் செயற்பாட்டுக்கு தேவையான எரி சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இலங்கையில் புதிய முச்சக்கர வண்டி அறிமுகம்
Reviewed by irumbuthirai
on
December 14, 2019
Rating:
No comments: