தேசிய பாடசாலைகளில் நிலவும் 278 அதிபர் வெற்றிடங்களுக்காக அரச சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவைக்குழு உரிய வகையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றில் தகுதி பெற்ற அதிகாரிகளிடம் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கு அமைவாக உரிய தகுதியைக் கொண்டவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை டிசம்பர் மாதம்
23 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்திற்கு அமைவாக பாடசாலைகள் சிலவற்றை குறிப்பிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிபர் பதவி வழங்கும் பொழுது அவர்களது இந்த விருப்பத்தை கவனத்தில் கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது. இந்த நேர்முக பரீட்சை டிசம்பர் மாதம் 23,24,26,27 மற்றும்
28 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது. இதன் கீழ் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிபர்களாக நியமிப்பதற்காக தெரிவு செய்யப்படுவார்கள்.
(அ.த.தி)
தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்: நேர்முக பரீட்சை திகதி அறிவிப்பு
Reviewed by irumbuthirai
on
December 19, 2019
Rating:
No comments: