மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தமது தாய் அல்லது தந்தையின் மறைவின் போது 2 இலட்சம் ரூபா
பாதுகாப்பு நன்மை கிடைக்கவுள்ளது.இது வரையில் இந்த பாதுகாப்பு நன்மை தாய் அல்லது தந்தையின் இயற்கை மரணத்திற்காக மாத்திரமே வழங்கப்பட்டது. இருப்பினும் எதிர்காலத்தில் இயற்கை மரணம் மாத்திரமன்றி எந்த சந்தர்ப்பத்திலாவது பெற்றோரை இழக்கும் மாணவர்களுக்கு அவர்களது எதிர்கால கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பிட்ட 2 இலட்சம் ரூபா நிதி நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்கு அமைவாக 2019.12.01. திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் எந்தவொரு பாடசாலை மாணவரும் தமது தாய் அல்லது தந்தையில் எவராவது எந்த வகையிலும் இழக்கப்படும் பொழுது (தற்கொலை போன்றவை) சுரக்ஷா காப்புறுதியின் மூலம் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்துடன் இணைந்த 2 இலட்ச ரூபா நன்மையை வழங்குவதற்கு கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர்களின் தேக ஆரோக்கியத்துக்காக நடைமுறைப்படுத்தப்படும் இந்த மாணவர்கள் காப்புறுதி மூலமான நன்மைகள் 5 வயது தொடக்கம் 21 வயது எல்லைக்கு பின்னரும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. சுரக்ஷா காப்புறுதி மூலமான நன்மைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது ஏதேனும் தாமதம் ஏற்படுமாயின்; கல்வி அமைச்சின் சுகாதர மற்றும் போசாக்கு கிளையுடன் 011 2784163 / 011 3641555 / 011 2784872 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும்.
(அ.த.தி)
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி விரிவுபடுத்தப்படுகிறது
Reviewed by irumbuthirai
on
December 14, 2019
Rating:
No comments: