உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்...



இம்மாத இறுதியில் அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம்  ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மாணவர் கடன் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 
உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8 இலட்சம் ரூபா வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். 2018 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி எய்திய அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும். இந்த கடன் திட்டத்தின் கீழ் பிரவேசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு 

இந்த கடனைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கடனைப் பெற்றுக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்... உயர் கல்விக்காக ரூ. 8 இலட்சம் வட்டியற்ற கடன்.... இம்மாத இறுதி முதல் திட்டம் ஆரம்பம்... Reviewed by irumbuthirai on January 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.