மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள்



இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில்,  புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார். அதாவது 

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளினால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய மென்பொருள் மூலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பில், பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
இவ் மென்பொருள் மூலம் இவர்கள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் குழுவுடன் தகவல் தொழில்நுட்ப பிரதிநிதிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளனர். சகல விமானப் பயணிகளுக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)
மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் மென்பொருள் மூலம் அவதானிக்கப்படும் சுற்றுலாப் பயணிகள் Reviewed by irumbuthirai on January 31, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.