15ம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் இது தொடர்பாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மஹாபொல புலமைப்பரிசில் தொகை 10 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்குமாறு மாணவர்கள் கோரியிருந்தனர். இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
மஹாபொல நிதியத்திற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் மஹாபொல புலமைப்பரிசிலுக்காக 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்கின்றது என்றும் அமைச்சர் கூறினார். மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆரம்பித்த மஹாபொல நிதியத்தில் 10.5 மில்லியன் ரூபா நிதி இருந்தது. கடந்த அரசாங்க காலப்பகுதியில் 2 பில்லியன் ரூபா நட்டம் இழக்கப்பட்டது. நட்ட நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டமையே இதற்கான காரணமாகும். இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். மஹாபொல நிதியத்தை 20 பி;ல்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும் உயர்கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவிற்கான திகதி அறிவிப்பு
Reviewed by irumbuthirai
on
January 11, 2020
Rating:
No comments: