வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக செல்லும் இலங்கை மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நிறுவனங்களை ஒழுங்குறுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இலங்கையிலிருந்து
15 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குறித்த நிறுவனங்களினால் வழங்கப்படும் வாக்குறுதியின்படி வெளிநாடுகளில் கல்வி கற்க முடியாமல் போகின்றது.
இது தொடர்பில் தாம் பங்களாதேஷ் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நாட்டு பல்கலைக்கழகங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்ததாகவும் உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் கூறினார்.
(அ.த.தி.)
வெளிநாட்டு பல்கலைக்கழங்களுக்கு, மாணவர்களை அனுப்பும் நிறுவனங்களுக்கான நடவடிக்கை ...
Reviewed by irumbuthirai
on
January 13, 2020
Rating:
No comments: