மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் இஸட் ஸ்கோர் நடைமுறை அடுத்த மாதத்தில் பாடசாலைக் கட்டமைப்பில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும்போது திறமையின் அடிப்படையில் இணைத்துக் கொள்வது 40 சதவீதமாக நடைமுறைப்படும். மாவட்டஅடிப்படையில்
55 சதவீதமும் பின்தங்கிய பகுதி அடிப்படையில் 5 சதவீதத்திற்குப் பதிலாக பாடசாலை கட்டமைப்பில் 60 சதவீதம பல்கலைக்கழக கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சுபீட்சமிக்க தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் விசேட தேவையைக் கொண்ட மாணவர்களுக்கு கல்விக்ககான சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்படுமெனறும் அவர் கூறினார்.
அரசியல் தலையீடுகள் இன்றி பாடசாலைகளுக்காக அதிபர்களை நியமிப்பதற்குத் தேவையானதிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அதிபர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகளுக்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
Z-Score நடைமுறை இனி பாடசாலைக் கட்டமைப்பில்....
Reviewed by irumbuthirai
on
January 12, 2020
Rating:
No comments: