50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்.



50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானத்தை இங்கு தருகிறோம்.


இதன் குறிக்கோள், நியமன நடைமுறை, பயிற்சி காலம், இடமாற்றம் சம்பந்தமான விடையங்கள் இதில் அடங்கியுள்ளன. 

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டம்:
 இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பட்டதாரிகளை தொழிலில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் மேலும் நாடு முழுவதிலும் சில அரச நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வெற்றிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது விஷேடமாக கிராமத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் அரச ஊழியர்களின் பற்றாக்குறையினால் கிராம மக்கள் அரச சேவையை பெற்றுக் கொளவதில்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வது அவதானிக்கப்பட்டுள்ளது. பழமை கலாச்சார நிர்வாகத்திற்கு அப்பால் சென்று பொது மக்களை இலக்காக கொண்ட சேவையை வழங்கும் முறையை அறிமுகப்படுத்துவதற்காக தற்பொழுது உள்ள நடைமுறையை சிறப்பான முறையில் மாற்றுவதற்காக இளைஞர் சமூகத்தினரை ஆற்றல் மற்றும் செயல்திறனை பயன்படுத்தக் கூடிய வகையில் 2012 ஆம் ஆண்டு தொடக்கம்


இது வரையில் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறி தொழில் வாய்ப்பின்றி இருக்கும் சுமார் 50,000 இளைஞர் யுவதிகளுக்கு பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 
இதற்கமைவாக 2019.12.31 திகதி அன்று பட்டத்தை பெற்ற மற்றும் பட்டதாரிக்கு சமமான கல்வி தகைமையாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகுதிகளை பூர்த்தி செய்துள்ள இளைஞர் யுவதிகளை பட்டதாரி பயிற்றுவிப்பாளர்களாக ஒரு வருட பயிற்சி காலத்திற்கு உட்பட்டதாக இணைத்துக்கொள்வதற்கும் பயிற்சி காலத்திற்கு பின்னர் ஐந்து வருடகாலம் ஆரம்ப நியமன தொழில் ஸ்தானத்தில் பணியாற்றிய பின்னர் மாவட்ட ஃ மாகாண மட்டத்தில் இடமாற்றத்தை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு கூடிய வகையில் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம். 50000 பட்டதாரி நியமனங்கள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம். Reviewed by irumbuthirai on February 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.