இவ்வருடத்தில் இலங்கை உயர்தொழில் நுட்ப கல்வி நிறுவகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை
20,000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இதேவேளை இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை பட்டம் வழங்கும் நிறுவனமான மாற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்படவுள்ளது.
தற்போதுள்ள கற்கைத் துறைகளில், எட்டுத் துறைகளுக்கு பட்டம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வவுனியா, யாழ்ப்பாணம், தெஹிவளை, மட்டக்குளி, காலி, அம்பாறை, ஆகிய நிலையங்களில் பட்டப் படிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(அ.த.தி.)
விரைவில் பட்டம் வழங்கும் நிறுவனமாகும் இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்...
Reviewed by irumbuthirai
on
February 01, 2020
Rating:
No comments: