Covid19 காரணமாக தற்போது நடைமுறையில் உள்ள பாடசாலை விடுமுறைகாலத்தில் பிள்ளைகளுக்கு எந்தவொரு தொலைபேசி வலயமைப்பின் ஊடாகவும் கட்டணமின்றி e-தக்சலாவ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வசதியை
கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
கல்வி அமைச்சு தொலைதொடர்பு ஒழுங்குறுத்தில ஆணைக்குழுவுக்கு விடுத்த வேண்டுதலுக்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பிரவேசிக்கும் அனைத்து பாடசாலை சிறார்களுக்கு பாட செயற்பாடுகள், வினாத்தாள்கள் மற்றும் பாடநூல் தொடர்பான பயிற்சிகள் உட்பட கற்றல் செயற்பாடுகளுக்கு வழிகாட்டியாக அதிகமான பாடதிட்டங்களுடன் ஒன்றிணைவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
மும்மொழிகளிலும் பாடப்பரப்புகளும் செயற்பாட்டு பயிற்சிகளும் வினாத்தாள்களும் உட்சேர்க்கப்பட்டுள்ளன.
குறித்த இணையத் தளத்திற்குச் செல்ல கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.
கல்வி அமைச்சின் e-தக்சலாவ வசதி இலவசமாக...
Reviewed by irumbuthirai
on
March 25, 2020
Rating:

No comments: